கேரள அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “அனைத்து பொது இடங்கள், பணியிடங்கள், சமூகக்கூட்டங்கள் மற்றும் அனைத்து வாகனங்களிலும் அனைவரும் முகமூடியை பயன்படுத்தி மூக்கு, வாயை மறைக்க வேண்டும். அனைவரும் பணி இடங்களில் முகமூடி பயன்படுத்துங்கள். வாகனங்களில் பயணிக்கும் போதும் மாஸ்க் அணிய வேண்டும். பொதுயிடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது” என அதில் றிப்பிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நெறிமுறையை உறுதிசெய்வதோடு வாடிக்கையாளர்கள் தங்களது கைகளை கழுவி சுத்தப்படுத்தி கொள்வதற்கும், கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க கடைகள், திரையரங்குகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அண்டை நாடான சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், இந்தியாவிலும் தொற்று எண்ணிக்கையானது அதிகமானது. ஆகவே கேரளாவிலும் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டு உள்ளது.