நீண்ட இடைவெளிக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தினை வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டுமாக நடைமுறைபடுத்த வேண்டுமென நாடு முழுவதும் ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தில் பெறப்பட்ட புதுப்பிப்பின் அடிப்படையில் டிசம்பர் 22, 2003 க்கு முன் பணியில் அமர்த்தப்பட்டிருந்த ஊழியர்கள் அனைவரும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலனை பெறுவார்கள்.

எனினும் டிசம்பர் 22, 2003-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன் கிடைக்காது. அவர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை பெறுவர். குறிப்பிட்ட ஒருசில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் திட்டத்தினை தேர்வு செய்யலாம் என கூறப்படுகிறது. அந்த ஊழியர்களுக்கு 31 ஆகஸ்ட் 2023 வரையிலும் பழைய ஓய்வூதியத்தை தேர்வு செய்வதற்கு கால அவகாசம் இருக்கிறது.

மேலும் தகுதியான ஊழியர்கள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தினை தேர்வு செய்யவில்லை எனில் அவர்களின் பெயர்கள் புது ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தொடரும் என அரசு கூறுகிறது. ஒரு ஊழியர் பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்வதற்கான விருப்பத்தை தேர்ந்தெடுத்தால், அது அவரது கடைசி விருப்பமாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.