உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

2023 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை இந்தியா நடத்துவது அனைவரும் அறிந்ததே. இந்த உலக கோப்பை திருவிழா இன்று முதல் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இன்று தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2 மணிக்கு மோதுகிறது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம்  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இப்போட்டியில் நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் ஆடவில்லை. அதேபோல இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லை. தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது..

நியூசிலாந்து அணி :

டேவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கே, வி.கீ), கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜிம்மி நீஷம், மிட்செல் சான்ட்னர், மேட் ஹென்றி மற்றும் ட்ரெண்ட் போல்ட்.

இங்கிலாந்து அணி :

ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கே, வி.கீ), மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், அடில் ரஷித் மற்றும் மார்க் வூட்.