
கேரள மாநிலத்தில் உள்ள தென்கோட்டி பகுதியில் சஹானா மும்தாஜ் என்கிற 19 வயது இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மே மாதம் அப்துல் வஹீத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் முடிந்த 20 நாளில் அப்துல் துபாய்க்கு வேலைக்கு சென்று விட்டார். அதன் பிறகு சஹானா தன்னுடைய கணவர் வீட்டில் மாமனார் மாமியாருடன் இருந்துள்ளார். இதில் சஹானாவை திருமணம் ஆன முதல் நாளிலிருந்து உடல் நிறத்தை காரணம் காட்டியும் ஆங்கிலம் பேச தெரியவில்லை என கூறியும். அவருடைய கணவரும் குடும்பத்தினரும் தொடர்ந்து டார்ச்சர் செய்து மனரீதியாக துன்புறுத்தினார்.
துபாயில் இருந்து கொண்டே சஹானாவை அவருடைய கணவர் whatsapp கால் மூலம் விவாகரத்து செய்யப்போவதாக மிரட்டியுள்ளார். இதனால் சகானா மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார். அவரால் சரிவர படிப்பில் கவனம் செலுத்த முடியாததால் கல்லூரி பேராசிரியர்கள் அவரை நிலைமையை உணர்ந்து பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் பெற்றோர் சகானாவை வீட்டிற்கு அழைத்து சென்று மனரீதியாக சிகிச்சை கொடுத்தனர். பின்னர் மாமியார் வீட்டிற்கு சென்று பெற்றோர் விட்ட நிலையில் என் மகனுடன் 20 நாட்கள் மட்டும்தான் வாழ்ந்துள்ளாய்.
இனியும் இந்த உறவு நீடிக்க வேண்டுமா என்று கூறி மாமியார் டார்ச்சர் செய்துள்ளார். இதனால் சகானா மன வேதனையில் தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நேற்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் அரை நீண்ட நேரமாக திறக்காததால் பெற்றோர் சந்தேகப்பட்டு உள்ளே சென்று பார்த்தபோது அவர் சடலமாக கிடந்தது தெரியவந்தது. மேலும் சகானாவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.