டைரக்டர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்த “சாகுந்தலம்” படம் சென்ற 14-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரூபாய்.60 கோடி பட்ஜெட்டில் உருவாகிய சாகுந்தலம் படம் இப்போது வரை ரூ.10 கோடி தான் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் உள்ள சிட்டிபாபு அண்மையில் பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா குறித்து பேசிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் கூறியிருப்பதாவது “எல்லா தடவையும் செண்டிமென்ட் கை கொடுக்காது. பாத்திரமும் படமும் நன்றாக இருந்தால் மட்டும்தான் மக்கள் பார்ப்பார்கள்.

நீங்கள் செய்யும் அனைத்தும் தரக்குறைவான மற்றும் பைத்தியக்காரத்தனமான செயல்கள் ஆகும். கதாநாயகிக்கான அந்தஸ்தை இழந்த சமந்தா சாகுந்தலம் கதாபாத்திரத்திற்கு எவ்வாறு பொருந்தினார் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. எனக்கு சாகுந்தலம் படம் குறித்து எந்த ஆர்வமும் இல்லை என பேசியிருக்கிறார்.