தென் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் தான் ஷங்கர். இவர் இப்போது கமலின் “இந்தியன் 2” ராம்சரனின் “கேம் சேஞ்சர்” ஆகிய 2 திரைப்படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்.

இவரது இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 சூட்டிங் சவுத் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் நிலையில், அதன் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக டைரக்டர் ஷங்கர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். அதாவது “ஒரு நல்ல பவர்ஃபுல் சூட்டிங் முடிந்துவிட்டது. கமல் சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்ததாக கேம் சேஞ்சர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க போகிறேன்” என ஷங்கர் தெரிவித்திருக்கிறார்.