மணிரத்னம் டைரக்டில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் “பொன்னியின் செல்வன் 2” திரைப்படம் அடுத்த வாரம் ஏப்ரல் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. அமெரிக்காவில் இதன் முதல் பாகத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. அதேபோல் இரண்டாம் பாகத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பிரிமீயர் காட்சிகளுக்கான முன்பதிவு ஆரம்பமாகி பரபரப்பாக நடந்துக்கொண்டிருக்கிறது. சராசரியாக 25 டாலர் அதற்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அமெரிக்காவில் தமிழ் படங்கள் வார இறுதி நாட்களில் தான் அதிக காட்சிகளுடன் வெளியாகும். “பொன்னியின் செல்வன் 2” படத்தை பொறுத்தவரை 1000-க்கும் மேற்பட்ட காட்சிகளில் திரையிடப்பட உள்ளதாம்.