
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் மதுரை மக்களவைத் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி பெற்று மீண்டும் எம்பியாகிறார்.