நாடாளுமன்ற தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக பூட்டி வைத்திருந்த அறையின் சாவியை அதிகாரிகள் தொலைத்துவிட்டனர். அந்த சாவியை அவர்கள் நீண்ட நேரமாக தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக பூட்டை உடைத்துவிட்டு அதிகாரிகள் உள்ளே சென்றனர். இது அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.