கர்நாடகா பெங்களூருவில் போஸ்டர் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. அந்த போஸ்டரில் தன் இடது சிறுநீரகம் விற்பனைக்கு இருக்கிறது. மேலும் நில உரிமையாளர்கள் கேட்கும் அட்வான்ஸ் கொடுக்க பணம் தேவை என விளம்பரதாரரின் சுய விவரத்தை அணுக க்யூஆர் (QR) குறியீடு போன்றவை குறிப்பிட்டு போஸ்டர் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் அந்த போஸ்டரை முழுமையாக படித்த போது அது உண்மையாக கிட்னி விற்பனைக்கானது இல்லை என தெரியவந்தது.

அதாவது அதிகளவில் வாடகை, அட்வான்ஸ் வசூல் செய்யும் வீட்டு உரிமையாளர்களை கேலி செய்ய ஒட்டப்பட்ட விளம்பர போஸ்டர் என்பது தெரியவந்தது. இந்த போஸ்டரை ரம்யாக் ஜெயின் என்பவர் பெங்களூரு இந்திரா நகர் பகுதியில் வாடகைக்கு வீடு குடியேற உள்ள சிரமங்களை குறிப்பிட்டு சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள்  நசைக்சுவையாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.