சேலத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின்,   கொள்கை உரம் தான் உங்களுக்கு உரம். கொள்கை உரம் தான் கலகத்திற்க்கான உரம்.  75 ஆண்டுகளாகி கழகம் இன்னைக்கும் கம்பீரமாக நிக்குதுன்னா…..  அதுக்கு நம் கொள்கை உரம் தான் காரணம். சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை,  சகோதரத்துவம், மாநில உரிமைகள்,  மொழி பற்று, இனப்பற்று,   பெண்ணுரிமை,  ஒடுக்கப்பட்டோர் நலன்,   எல்லோருக்கும் எல்லாம் என்ற அடித்தளத்திலேயே உருவாக்கப்பட்டு இருப்பது தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

ஒரு சீர்திருத்த இயக்கத்தின் கையில் ஆட்சி நடத்தும் வாய்ப்பு வரும் ஆனால் என்னென்ன செய்ய முடியுமோ,  அதை அத்தனையும் செய்து காட்டியிருக்கோம். தமிழ்நாட்டினுடைய வளத்திற்கும்,  நலத்திற்கும் காரணமானவர்கள் நாம். இதற்கு இப்பொழுது ஆபத்து வந்து இருக்கு. அந்த ஆபத்தை உணர்ந்து,  தடுப்பதற்காக தான் இளைஞர் அணி மாநாட்டையே…  மாநில உரிமை மீட்பு மாநாடாக நாம ஏற்பாடு செய்திருக்கிறோம்.

நாம பெயர் சூட்டின நம்முடைய தமிழ் நிலத்திற்கு ஆபத்து வந்திருக்கு.  மொழியை அழிச்சு,  தமிழ் பண்பாட்டை அழிச்சு, மாநில மதிப்பை அழிச்சு,  அதன் மூலம் தமிழினத்தை அழித்து,  நம்மை அடையாளம் அற்றவர்களாக ஆக்க பாசிச பாஜக திட்டமிட்டு இருக்கு. இன்னொரு பக்கம் பத்தாண்டு காலம் தமிழ்நாட்டை எல்லா வகையிலும் பால்படுத்திய கட்சி அதிமுக. அவங்க அயோக்கியத்தனம் அனைத்தையும் மக்கள் மறந்துருப்பாங்கன்னு  நினைக்குறாரு பழனிச்சாமி.

இப்போ அவர்கள் ஆடுற உள்ளே வெளியே ஆட்டம் பாஜகா போட்டு கொடுத்த நாடகம்… பழனிச்சாமியின் உடைய பகல் வேஷத்தை அதிமுகவின் தொண்டர்கள் நம்ப தயாராக இல்லை,  அதுதான் உண்மை. பாஜக – அதிமுக இவுங்க ரெண்டு பேரின் படுபாதக  செயல்களை  தடுப்பது தான் நம் முன்னால் இருக்கக்கூடிய முக்கிய கடமை என தெரிவித்தார்.