தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, லீடர்ஷிப் என்ன ? அது ஒரு பேப்பர்ல கொடுக்கிறது….. ஜே.பி நட்டாஜீ அவர்கள் அதில் கையெழுத்து போட்டு தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை என ஒரு கையெழுத்து போட்டு கொடுத்துட்டாரு. நான் அதுல கையெழுத்து போட்டு,  தென் சென்னையினுடைய பாராளுமன்ற பொறுப்பாளர் கரு.நாகராஜ் என கொடுத்துட்டேன். அவரு கையெழுத்து போட்டு நீ பூத் தலைவருன்னு கொடுத்துட்டாரு.

இதெல்லாம் பேப்பர்ல இருக்கு. லீடர்ஷிப் என்பது ஃபீல்டுல இருக்கணும்…. அதனால் பேப்பர்ல நாம கையெழுத்து போட்டு, நீங்க இப்படி, நீங்க இப்படி என நம்முடைய கட்சி ஒருவருக்கு ஒருவர்  கையெழுத்து போடுவதில்லை. லீடர் ஷிப் என்பது பில்டுல அக்க்ஷன்ல இருக்கணும். அதனால நீங்க அதை வாய்ப்பாக எடுத்துட்டு, அண்ணே நான் பில்டுல இருக்கேன். நான் வீடு ஏறுவேன்,  இறக்குவேன். என்ன பத்தி உங்களுக்கு தெரியாது….  உங்கள பத்தி எனக்கு தெரியாது. அப்படி நாம நிறைய பேர் இந்த அரங்கத்தில் இருக்கின்றோம்…

நாம நிறைய பேர் பார்த்ததில்ல… பேசுனதுல…. கை கொடுத்ததில்லை….. அப்படி இருந்தாலும் கூட உணர்வால் நாம் இணைந்துள்ளோம்.  ஒன்று போல இணைந்துள்ளோம். நம்முடைய கட்சி…..  நம்முடைய குடும்பம் ஒரே ஒரு சித்தாந்தத்துக்காக இருக்கும்போது நீங்க,  தனிப்பட்ட வேலையாக  சுமையாக உங்க தோள்பட்டையில் ஏத்துங்க…. ஏறி இறங்குங்க,  உங்களுக்கு ஆத்மார்த்தமா அந்த ஃபீல் இருக்கனும். ஏப்ரல் மாசத்துல மே மாதத்தில் தமிழ்நாட்டில் எலக்சன் நடக்குதோ நான் ஒரு 300 ஓட்டை POLL  பண்ண வச்சிடுவேன்.

அது என்னால வந்த ஓட்டு. அவ்வளவுதான்  சார் வெறி. இத்தனை நாளா உழைச்சதுக்கு,  அவ்வளவுதான்…  பொங்கலுக்கு ஊருக்கு போகாம சுட்டெரிக்கின்ற வெயிலிலும் வந்து உட்கார்ந்து இருக்கீங்க. இவ்வளவு தியாகம் பண்ணுறீங்க உங்களுக்கு ரிசல்ட் என்ன ? 300 ஓட்டு ஏன் காண்ட்ரிபியூசன். இந்தியாவை பலப்படுத்துவதற்கு…..  மோடி அங்கு உழைக்கிறார், நான்  பூத்துல உழைக்கிறேன்.  நான் 300 ஓட்டை கொண்டு வரேன்,  எழுதி வைத்துக் கொள்ளுங்கள். பெரிய புண்ணியம் கிடைக்கும்….  300 மனிதர்களை கொண்டு வந்து கரெக்டா POLL பண்ண வச்சு பாருங்க, இப்போ இருந்தே அதற்கான வேலையை பாருங்க .

அவங்களுக்கு ஓட்டர்ஸ் இருக்கா ? அவங்க எந்த பூத்துக்கு போகணும் ?  எல்லாமே நீங்க கையேடு பண்ணுங்க…. ஓட்டு போடாதவங்கள ஓட்டு போடு, ஓட்டு போடு என்றால், எப்படி போடுவாங்க ? ஒரு பக்கம் மோட்டிவேஷன்….  வெறும் மோட்டிவேஷனில் மட்டுமே இந்த உலகம் மாறுவதாக இருந்தால், இந்தியா  இன்னும் வளர்ந்த நாடாக மாறி இருக்கும். எத்தனை மோட்டிவேஷன் லெக்சர் நடக்குது ? காலேஜுக்கு போனா எல்லாம் மோட்டிவேஷன் தான் பேசுறாங்க.  ஒரு சின்ன ஸ்கூலுக்கு போனாலும் மோட்டிவேஷன் தான் பேசுறாங்க. ஆனால் உலகம் மாறுவது இல்லை.  அந்த மோட்டிவேஷனுக்கும் ஆக்சனுக்கும் ஒரு கேப் இருக்கு.  அந்த கேப்பை நீங்க பிள் பண்ணனும்.

ஓஹோ… இவுங்க ஓட்டு போடல…. எப்படி ஓட்டு போடணும்…. நீங்களே போய் அண்ணே இங்கே பாருங்க.. உங்க பெயர் இருக்குதா ? ஓட்டர்ஸ் லிஸ்ட்ல நீங்க இருக்கீங்களா ? இதான் உங்கள் பூத். வாங்க அண்ணே ஓட்டு போட்டுட்டு வருவோம். என்ன அண்ணே பிரச்னை ? எங்க ஆளுங்க ரெண்டு பேரை பூத்துக்கு வெளியில் நிற்க வைத்திருக்கிறேன் அண்ணே…. நாங்க பூத்துக்கு ரெண்டு பேரு பாரதிய ஜனதா கட்சியின் வாலண்டியர் ரெண்டு நிற்கிறோம் அண்ணே…. நீங்க போகும் போது இந்த பூத்துக்கு இந்த போன் நம்பருக்கு கூப்பிடுங்க அண்ணே….

எங்க  பையன் ஒருத்தன் ரெடியாக வெயிட்டிங்ல இருப்பான். நீங்க போன உடனே ஸ்லிப் கொடுப்பான். உள்ள போங்க ஓட்டு போடுங்க. கொஞ்சம் எளிமையாக கையாண்டீர்கள் என்றால் ?  பூத்துக்கு ஓட்டு போட வருவாங்க. அந்த வேலையை நீங்க செய்யணும். அவங்களுக்கு மோட்டிவேஷன் இருக்குங்க ஐயா. ஆனால் ஆக்சன் போடறதுக்கு கேப் இருக்கு. அதை நம்முடைய கட்சி நண்பர்கள் இதை ஒரு கோலா எடுத்து,  நீங்கள் செய்யணும்… இதெல்லாம் நீங்க செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  நிச்சயமாக 2024 பாராளுமன்ற தேர்தலில் தென் சென்னையை  பொறுத்தவரை நாம் வெற்றிவாகை சூடுவோம் என்கின்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என தெரிவித்தார்.