தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அதாவது, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயருடன் அரசாணை வெளியிட்டது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிக்க மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு பெண்களின் பெயரை பொதுவெளியில் வெளியிட்ட காவல் அதிகாரி பாண்டியராஜனை பணிநீக்கம் செய்யவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.