டிடிவி தினகரனுக்கு எதிரான மேல்முறையீடு வழக்கின்  தீர்ப்பு தேதி குறிப்பிடாமல்  ஒத்திவைப்பு.

1995 – 1996 இல் இந்திய ரூபாயில் ரூ. 62.61 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலரை அங்கீகாரம் அற்ற முகவர் மூலமாக பெற்று,  அதை இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக மாற்றியதாக  புகார் எழுந்தது. இதையடுத்து அன்னிய செலாவணி மோசடி டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்தவர்களில்டிடிவி தினகரனை திவால் ஆனவர் என அறிவிப்பது தொடர்பான நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது.அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக டிடிவி தினகரனுக்கு எதிராக அமலாக்கத்துறை கொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.