புதுச்சேரியை அடுத்த தர்மபுரி நடுத்தெருவை சேர்ந்த மீனா ரோஷினி என்ற பெண் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

புதுச்சேரியை பொருத்தவரை டெங்கு நோய் பாதிப்பு என்பது தொடர்ந்து பரவலாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு புதுச்சேரியி டெங்கு பாதிப்பு என்பது அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 800 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 1200 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பாதிப்பு கண்டறியப்பட்ட உடனே மருத்துவமனைக்கு வந்து  சிகிச்சை பெற்று நலமடைந்துள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள  தர்மபுரியைச் சேர்ந்த மீனா ரோஷினி என்பவருக்கு கடந்த 4ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இவர் தனியார் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அங்கு அவருக்கு சாதாரண குளிர் காய்ச்சல் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதற்காக சிகிச்சை எடுத்திருக்கின்றார். இருந்தபோதும் அவருடைய உடல்நிலை மிக மோசமானதை தொடர்ந்து 8ஆம் தேதி மீண்டும் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை செய்தபோது அவருடைய ரத்த அணுக்கள் படிப்படியாக குறைந்து,  கடைசி நேரத்தில் சிகிச்சை பலனின்றி ஜிப்மர் மருத்துவமனையில்  உயிரிழந்திருக்கிறார். ஏற்கனவே இன்று புதுச்சேரியில்  மாணவி காயத்ரி டெங்குவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.