அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  என்னை இன்னும் தெர்மாகோல் என சொல்லி  ஓட்டுறாங்க… ஓட்டுறாங்க… ஓட்டுறாங்க… ஓட்டிகிட்டே இருக்காங்கப்பா… என்னைக்கு  தான் முடியும்னு தெரிலையே… நான் எங்கப்பா போவ. நான்  வைகை ஆற்றுக்காக போய்…. திருவிழா வருது… என் மதுரைக்கு 15 லட்சம் மக்கள் வருவாங்களே…  இருக்கிறதே 15 அடி,  20 அடி தான்.அதை காப்பாத்தணுமே…  அதிகாரிகள் சொல்றாங்களேன்னு  போய் செஞ்சா, புடிச்சுட்டாங்க.

அன்னையிலிருந்து இன்னைக்கு துரைமுருகன் கூட விட மாட்டேங்குறாரு. எதிர்த்து கேள்வி கேட்கிறேன். இன்னிக்கு வறட்சி ஏற்பட்டு இருக்கு இல்ல.  நீ ஏதாச்சும் ஒன்னு கண்டுபிடிக்கலாம் என  கேட்கலாம். அது நாகரிகம் அல்ல.  டேக் இட் ஈஸி, டேக் இட் ஈஸி பாலிசி. நம்ம பாலிசியே தனியப்பா.

என் தலைவரை வையாதவர்கள் உண்டா ?  என் தலைவரை பாராட்டாதவர்கள் உண்டா ? என் தலைவர்-  தலைவியை  பாராட்டாதவர்கள் உண்டா ? கடைசியில் கொடுஞ்சிறையில்  அடைத்தார்களே சண்டாளர்கள். 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி கொள்ளை அடிச்ச திமுக குடும்பம் ஒரு பொய் வழக்கை போட்டு என் தாயை மாட்டி விட்டுட்டாங்களே…  அவருக்கு குடும்பம் இல்லை.  அவருக்கு பிள்ளைகள் இல்லை. அவரின்  பிள்ளையாக….  தன் குடும்பமாக நினைத்தது தமிழ்நாட்டு மக்களை தான்….

மறைந்திருந்தாலும்  நிலை குலையாத மாணிக்க தங்கம் புரட்சித் தலைவர், புரட்சி தலைவி அம்மா. அம்மா சொன்னார் எனக்கு எங்க அம்மா,  அப்பா வைத்த பெயர் ஜெயலலிதா. ஆனால் என் தமிழ்நாட்டு மக்கள் என்னை அம்மா, அம்மா என்று அழைக்கிறார்களே…  அது தான் எனக்கு சிறப்பு. இது போதும்.. இவர்களுக்காக நான் இறுதிவரை பாடுபடுவேன் என்று சொன்னார்.