
தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதன் பிறகு ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை செய்ய வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.