அமெரிக்காவின் கலிபோனியாவில் கடந்த 11ம் தேதி ஹெர்னான்டஸ் என்பவர் மது அருந்திவிட்டு தனது 3 வயது குழந்தையை காரின் பின் இருக்கையில் அமர வைத்துள்ளார். இவரது கார் ஃபேஷன் லேனில் என்ற இடத்தில் நிறுத்தியுள்ளர். அப்போது வெளியில் வெப்பநிலை 104 டிகிரியை எட்டியது. இந்நிலையில் ஹெர்னான்டஸ், அவரையும், அவரது குழந்தையையும் காரைக்குள் வைத்து பூட்டியுள்ளார்.

இதனால் அந்த குழந்தை வெப்பம் தாங்க முடியாமல் அழுதுள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறினர்.

அவரது உயிரிழப்பிற்கு வெப்ப பக்கவாதத்தால் ஏற்பட்ட சிக்கல்தான் காரணம் என்றும் கூறியுள்ளனர். இதுகுறித்து ஹெர்னான்டஸின் பெரிய அத்தையிடம் விசாரிக்கப்பட்டது. அவர் கூறியதாவது, ஹெர்னான்டஸ் தனது 5 வயது குழந்தையை பள்ளியிருந்து அழைத்துச் வருவதற்காக சென்றார்.

ஆனால் அப்போது  ஹெர்னான்டஸ் குடிபோதையில் காரை பூட்டியுள்ளார். இதனால் வெப்பநிலை தாங்காமல் குழந்தை இறந்ததாக கூறினார். இதனால் காவல்துறையினர் ஹெர்னான்டஸ் காரை சோதனை செய்தனர் அப்போது அதில் காலியான பாட்டில்கள் இருந்துள்ளனர். இதனால் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.