மேற்கு ரஷ்யாவில் உள்ள பெர்மில் பகுதில் ‘க்ரோஷிக்’.என்ற பூனை 17 கிலோ எடையுள்ள ஒரு பூனை உடல் பருமனால் அவதிப்பட்டு வருகிறது. பொதுவாக ஒரு பூனை 4-5 கிலோ எடை கொண்டிருக்கும். ஆனால் இந்த பூனையின் எடை மிக அதிகமாக இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிகமாக சாப்பிடுவதால் சிறு வயதிலிருந்தே இந்த பூனை உடல் பருமனால் அவதிப்பட்டு வந்துள்ளது.
தற்போது நடக்க கூட முடியாத நிலையில் இருப்பதால், ‘மேட்ரோஸ்கின்’ என்ற தங்குமிடத்தில் மறுவாழ்வு சிகிச்சை பெற்று வருகிறது. மருத்துவர்கள் க்ரோஷிக்கிற்கு அல்ட்ராசவுண்ட் செய்ய முயற்சித்த போது, அதன் உடலில் கொழுப்பு அடுக்குகள் மிக அதிகமாக இருந்ததால் ஸ்கேன் செய்ய முடியவில்லை. இது மிகவும் அரிதான நிகழ்வு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.