
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சண்முகபுரத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் லோடு ஆட்டோ டிரைவராக இருக்கிறார். கடந்த 15-ஆம் தேதி கலைச்செல்வனின் நண்பர் சதீஷுக்கு பிறந்தநாள். இதனால் அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் சந்திரசேகர், அப்பு ஆகியோர் மதுபானம் வாங்கி தருமாறு கேட்டனர். அதற்கு சுதந்திர தினம் அன்று டாஸ்மாக் கடைகள் கிடையாது. இன்னொரு நாள் மது வாங்கி தருகிறேன் என சதீஷ் கூறினார்.
இதனால் சந்திரசேகரும் அப்பவும் அங்கிருந்து சென்றனர். அன்று இரவு 10 மணிக்கு சந்திரசேகரும், அப்புவும் கலைச்செல்வனின் வீட்டிற்கு அருகே சென்றனர். அப்போது சதீஷ், கலை செல்வன் ஆகியோர் மது குடித்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த சந்திரசேகர் எங்களுக்கு மதுபானம் இல்லை என கூறிவிட்டு நீங்கள் மட்டும் மது குடிக்கிறீர்கள்? உங்களுக்கு மட்டும் எப்படி கிடைத்தது என கேட்டதால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த சந்திரசேகரும், அப்புவும் பீர் பாட்டிலால் கலைச்செல்வன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் தாக்கினர். இதனால் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் என்று கலைச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சந்திரசேகரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் அப்புவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.