பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு என்பது இந்திய ஆயுதப்படைகளுக்கு தேவையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்கக்கூடிய ஒரு பாதுகாப்பு ஆராய்ச்சி மையமாக திகழ்கிறது. அதேசமயம் இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அறிவியல் அமைப்பு போன்ற பல துறைகளுடன் இணைந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்தியாவில் சுமார் 41 ஆயுவகங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும் உருவாக்கி வருகின்றது.

இப்படியான நிலையில் DRDO துறை இன்டர்ன்ஷிப் ப்ரோக்ராம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் இளங்கலை அல்லது முதுகலை பொறியியல் பட்டப்படிப்புகள் மற்றும் பொது அறிவியலில் பட்டம் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. DRDO இன்டர்ன்ஷிப் 2025க்கு விண்ணப்பிக்க 19 வயது முதல் 28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதத்திற்கு 8000 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிறுவனம் மூலமாக DRDO ஆய்வகத்திற்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.