தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித். இவர் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் அஜித் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். ஏகே 62 படத்தில் முதலில் விக்னேஷ் சிவன் இயக்குனராக கமிட்டான நிலையில் தயாரிப்பு நிறுவனத்துடன் கதையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன்பிறகு மகிழ்திருமேனி ஏகே 62 படத்தின் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டதால் மீண்டும் அதே தலைப்பை படக்குழு வெளியிட விரும்பாததால் புதிய தலைப்புடன் அஜித் பட அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது படம் பற்றிய அறிவிப்பு வருவதற்கு தாமதமாவது அஜித் ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது ஏகே 62 படம் குறித்த புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகிய இரண்டும் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.