இந்தியாவில் இப்போது அனைத்தும் டிஜிட்டல் ஆகிவிட்டது. மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இருக்கும் இடத்திலிருந்து ஆன்லைன் ஆர்டர் செய்து டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் வாங்குகின்றனர்.

இதில் பேடிஎம் நிறுவனம் அவ்வபோது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய சேவைகளை வழங்குகிறது. இந்நிலையில் தற்போது பேடிஎம் தனது வாடிக்கையாளருக்கு ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான UPI ID- ஐ உருவாக்க முடியும். இதன் மூலம் மொபைல் நம்பரை வெளிப்படுத்தும் சிரமங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு என்று தனியாக UPI ID சேவையை பேடிஎம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது வரை  UPI ID- ஐ பயன்படுத்தும்போது மொபைல் எண் மூலம் பணத்தை செலுத்துகிறோம். இதனால் நாம் பணம் அனுப்பும் நபரால் நம்முடைய நம்பரை பார்க்க முடியும். ஆனால் பலர் தங்களுடைய மொபைல் நம்பரை வெளிப்படுத்த வேண்டாம் என்று நினைப்பார்கள். இதனை கருத்தில் கொண்டு பேடிஎம் நிறுவனம் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

UPI ID- ஐ உருவாக்குவது எப்படி என்பதை பார்க்கலாம். பேடிஎம் செயலியை திறந்து ப்ரொபைல் ஐகானில் யுபிஐ செட்டிங்ஸ் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து மேனேஜ் யுபிஐ என்பதற்குள் சென்று தனிப்பயனாக்கப்பட்ட ஐடியை தேர்வு செய்ய வேண்டும். பணம் செலுத்துவதற்கு முன்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐடியை உறுதி செய்து செயல்படுத்த வேண்டும்.