கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,   டெல்லிக்கு நிவாரணம் கேட்க போகல….  இந்தியா கூட்டணியில்  கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தான் அவர் போனார். மக்கள் உடைய பிரச்சனையை பேசுவதற்காக போகவில்லை…

மக்களுடைய குறைகளை பாரத பிரதமரிடம் தெரிவிக்க போகவில்லை. அவருடைய நோக்கம் இந்தியா கூட்டணி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் எப்படி செயல்படலாம் ? அப்படிங்கற கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தான் டெல்லி சென்றார்…  மக்கள் உடைய பிரச்சினைக்காக போகவில்லை… அவருடைய குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும்…..

இங்கே செய்த ஊழல்கள் எல்லாம் மத்தியிலே ஆட்சிக்கு வந்து விட்டால் மறைக்கப்படலாம் என்ற அடிப்படையில்தான் அவர் செயல்பட்டார். நாட்டை பற்றிய கவலை இல்லாத முதலமைச்சர் நம்ம முதலமைச்சர் தான். எப்போது பார்த்தாலும் வீட்டு மக்களை பற்றி கவலைப்படுகின்ற ஒரே முதலமைச்சர் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருக்கின்றபோதும் ஏரி, குளம், குட்டை எல்லாம் இன்றைக்கு குடிமராமத்து  திட்டத்தின் மூலமாக ஆளப்படுத்தி…. கரைகளை பலப்படுத்தி நாங்க பாதுகாத்தோம். ஆனால் இந்த விடியா திமுக அரசு அற்புதமான குடிமராமத்து திட்டத்தை கைவிட்டுடாங்க……

அந்த ஏரிகளையும் பராமரிக்க கைவிட்டுட்டாங்க. அதனால இன்றைய தினம் கனமழை பெய்கின்ற போது ஏறி நிரம்பி,  ஆங்காங்கே இருக்கின்ற கரைகளை உடைத்து….  குடியிருப்பு பகுதியில் நீர் புகுந்து,   விவசாயிகள் நிலங்களுக்குள் நீர் புகுந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.

ஏற்கனவே மத்திய குழு வந்துட்டு போயிருக்காங்க. இந்த அரசு நிவாரண கேட்டு இருக்கிறது. அந்த நிவாரணத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். இதிலே அரசியல் பார்க்காமல், மக்களுடைய பிரச்சினயை  பார்த்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை,  பாரத பிரதமரை வலியுறுத்தி கேட்கிறேன்.