
விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான ரிஷப் பண்ட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடப்போவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார். சமூக வலைதளங்களில் பரவிய இந்த தகவல் உண்மையல்ல என்றும், இத்தகைய தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் பண்ட், அணியின் முக்கிய வீரராகவே இருந்து வருகிறார். 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக பல்வேறு வீரர்கள் தொடர்பான டிரேடிங் செய்திகள் வெளியாவதால், பண்ட் திடீரென அணியை மாற்றப்போவதாக வதந்திகள் உருவாகின. இதற்கு பதிலளித்த பண்ட், இந்த தகவல் பொய்யானது என்பதையும், உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பாமல் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
கடந்த 2022ஆம் ஆண்டு கார் விபத்தில் இருந்து மீண்டு வந்த பண்ட், மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார். சமீபத்திய டெஸ்ட் போட்டியில், வங்காளதேச அணிக்கு எதிராக சதமடித்து, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறியுள்ளார்.