த்ரிஷா துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை FDFS பார்த்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் இரு உச்ச நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். இன்று வினோத் இயக்கத்தில் அஜித்தின் துணிவு திரைப்படமும் வம்சி இயக்கத்தில் விஜயின் வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆகி உள்ளது. இவர்களின் திரைப்படங்கள் தனித்தனியாக வந்தாவே திருவிழா போல் காட்சி அளிக்கும். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை ஒட்டி இருவரின் திரைப்படமும் இன்று ஒரே நாளில் வெளியாகி இருக்கின்றது.

இரண்டு திரைப்படங்களையும் ரசிகர்கள் அடுத்தடுத்து பார்த்து வரும் நிலையில் பிரபல நடிகையான திரிஷாவும் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை FDFS-விலேயே பார்த்திருக்கின்றார். தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் திரிஷா படம் பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருக்கின்றார்.