தெலங்கானா மாநிலம் ஹனுமக்கொண்டா மாவட்டத்தின் கமலப்பூர் பகுதியில் இந்தச் சோகம் நடந்துள்ளது. கேஸ் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்றை, இளைஞர் ஒருவர் தனது பைக்கில் இடதுபுறமாக முந்த (Overtake) முயன்றுள்ளார். அப்போது சாலையோரம் கொட்டிக் கிடந்த மணல் மற்றும் ஜல்லிக் கற்களால் பைக் திடீரென நிலைதடுமாறிச் சறுக்கியது.
பைக் சறுக்கிய வேகத்தில், அந்த இளைஞர் நேராக லாரியின் முன் சக்கரத்திற்கு அடியில் விழுந்தார். கண் இமைக்கும் நேரத்தில் லாரியின் சக்கரம் அவர் மீது ஏறியதில், அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
#Kamalapur 🚨⚠️Disturbing Visuals#Intersection
– Looks like speeding motorcycle tried to overtake lorry from the left, loose sand/gravel on concrete, tyres won’t hold well– Scooter heading on the wrong side @DriveSmart_IN
pic.twitter.com/rw2rTq9eUf— Dave (Road Safety: City & Highways) (@motordave2) January 3, 2026
இந்த விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. “அவசரம் ஒருபோதும் ஆபத்துதான்” என இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல் தமிழ்நாட்டின் ஆரணியில் ஓடிக்கொண்டிருந்த லாரியை கையால் தடுக்க முயன்ற தொழிலாளி ஒருவர் உயிரிழந்த மற்றொரு சோகமான சம்பவமும் தற்போது இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
