டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் சமீபகாலமாக ஒரு புதிய வகை மோசடி அரங்கேறி வருகிறது. சூட் அணிந்து மிகவும் நாகரிகமாகத் தோற்றமளிக்கும் நபர் ஒருவர், மெட்ரோ நிலையத்திற்கு வெளியே வழிப்போக்கர்களை வழிமறிக்கிறார்.

தன்னை ‘யுபிஎஸ்சி’ (UPPSC) தேர்வுக்குத் தயாராகும் ஒரு மாணவன் என அறிமுகப்படுத்திக்கொள்ளும் அவர், தனது மெட்ரோ கார்டில் பேலன்ஸ் தீர்ந்துவிட்டதாகவும், ஆன்லைன் பேமெண்ட் வேலை செய்யவில்லை என்றும் கூறி உதவி கேட்கிறார்.

முதலில் மிகவும் பணிவாகப் பேசி 50 ரூபாய் மட்டும் கேட்கும் அந்த நபர், எதிரே இருப்பவர் உதவ முன்வந்தால் மெதுவாக தனது கதையை மாற்றி 150 ரூபாய் வரை கேட்கத் தொடங்குகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by FFS (@directionsirl)

“சாப்பிட்டே ஒரு நாள் ஆகிறது, பசியாக இருக்கிறது” என உணர்ச்சிவசப்பட்டுப் பேசும் அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த ஒரு வாலிபர், அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

“இவர்கள் மக்களின் இரக்க குணம் மற்றும் உணர்ச்சிகளை வைத்துப் பணம் பறிக்கிறார்கள், படிக்கும் மாணவர்கள் என்று சொன்னால் யாரும் எளிதில் நம்பிவிடுவார்கள் என்பதே இவர்களின் கணக்கு” என நெட்டிசன்கள் எச்சரிக்கின்றனர்.

டெல்லி மெட்ரோவில் பயணிப்பவர்கள் இதுபோன்ற அறிமுகம் இல்லாத நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.