
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அனைத்து நாடுகளுக்கும் எதிராக வரிவிதிப்பை வெளியிட்ட அவர் சீனாவிற்கு மட்டும் அதிகப்படியான வரி விதிப்பை வெளியிட்டார்.
இந்த வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அமெரிக்கா மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தயாரித்து வரும் ஐபோன்களின் உற்பத்தியை குறைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் வேறு நாட்டில் தயாரிக்கப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிற்கு அனுப்புவதை நாங்கள் விரும்பவில்லை.
அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதால் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து சாம்சங் நிறுவனத்திற்கும் வரி விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். அதாவது வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப் ஆப்பிள் நிறுவனத்திற்கு மட்டும் வரிவிதிப்பு கிடையாது.
சாம்சங் மற்றும் மின்னணு பொருள்கள் தயாரிக்கும் அனைத்து நிறுவனத்திற்கும் இது பொருந்தும். குறிப்பாக தனது ஸ்மார்ட் போன்களை வியட் நாம் தென்கொரியா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில் சாம்சங் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. மேலும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் வியட்நாமில் உற்பத்தி செய்யப்படுவதால் 46% வரை வரி விதிக்கப்படலாம்” என்று கூறினார்