சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் (Reels) பதிவிடுவதற்காக தீ சாகசத்தில் (Fire Stunt) ஈடுபட்ட 40 வயதான அல் அமீன் என்ற பங்களாதேஷ் உள்ளடக்கக் கிரியேட்டர் (Content Creator) ஒருவர், சாகசம் தவறாகப் போனதால் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகிறார்.
அவர் தற்போது டாக்காவில் உள்ள BIRDEM மருத்துவமனையின் தீக்காயப் பிரிவில் (Burn Unit) கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை தர்யாபூர் செங்கல் களப் (Dariyapur Brickfield) பகுதிக்கு அருகிலுள்ள ஒரு செயற்கைக் குளத்தில் நடந்தது. அங்கு அல் அமீன் ஒரு நாடகத்தனமானத் தீக் காட்சியைப் படமாக்க முயன்றுள்ளார்.
View this post on Instagram
குளத்தின் மேற்பரப்பில் பெட்ரோலைத் தெளித்து அதற்குத் தீ வைக்க அவர் திட்டமிட்டுள்ளார். ஆனால், பெட்ரோலின் அளவு அதிகமாக இருந்ததால், தீ திடீரெனப் பற்றி எரிந்து அவரையே சூழ்ந்துள்ளது.
பதட்டமடைந்த அல் அமீன் குளத்தில் குதித்துத் தீயை அணைக்க முயன்றபோதும், அவரது உடலில் 35-40% வரை தீவிரத் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், நிலைமை மோசமானதால் தற்போது சிறப்புத் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் (CCU) சிகிச்சை பெற்று வருகிறார்.
