
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள தானே பகுதியில் ஆள் கடத்தல் பிரிவு காவல் அதிகாரிகளுக்கு, ஓட்டல் ஒன்றில் சிறுமியை பாலியல் தொழிலாளியாக மாற்ற முயற்சிக்கின்றனர் என்று ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இதன் பேரில் காவல்துறையினர் போலி வாடிக்கையாளராக ஒருவரை அந்த விடுதிக்கு அனுப்பி வைத்தனர். அப்போதுதான் அங்கு 13 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்கு மாற்ற ரூபாய் இரண்டு லட்சத்திற்கு பேரம் பேசப்பட்டுள்ளது தெரியவந்தது. இது குறித்த அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது பெண் தரகர் ஒருவர் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த சிறுமியின் தாய்க்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ள விவகாரம் தெரியவந்தது. இதனை அடுத்து பெண் தரகர் மற்றும் சிறுமியின் தாயார் இருவரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். தாயே தன் மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.