தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜயுடன் சேர்ந்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் ஒன்றினை தொடங்கப் போவதாக அண்மைக்காலமாகவே தகவல்கள் வெளியான நிலையில் அவருடைய நண்பர் ரத்தினகுமாரின் படத்தை தான் முதலில் தயாரிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கும் படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிப்பதாகவும், நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.