டைரக்டர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் “பதான்”. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். அதோடு பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படம் சென்ற ஜனவரி 25ம் தேதி இந்தியா முழுவதும் 8000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி ரிலீஸ் ஆன இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இத்திரைப்படம் இந்தியாவில் ரூபாய்.629 கோடியும், வெளிநாடுகளில் ரூ.380 கோடியுமாக மொத்தம் ரூ.1009 கோடியை வசூல் செய்து இருப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருக்கிறது. அந்த வகையில் இப்படம் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.