தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் தற்போது வீடு வீடாக சென்று விநியோகிக்கப்படுகிறது. டோக்கன் கிடைக்காதவர்கள் தங்களுடைய ரேஷன் கார்டை காண்பித்து நேரடியாக ரேஷன் கடைகளுக்கு சென்று டோக்கனை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜனவரி 9-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் சென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைக்கிறார். இதே நாளில் மற்ற மாவட்டங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இதனையடுத்து ஜனவரி 9-ம் தேதி முதல் ஜனவரி 13-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. ஒருவேளை இந்த தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற முடியாதவர்கள் ஜனவரி 15-ஆம் தேதி மற்றும் 16-ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவலை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.