செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கணைப்பாளர் சீமான், என் பிள்ளைகள் காரை  வந்து ஒட்டி வந்தா தடுத்து,  அடிக்கிறது… அது பண்றது… இது பண்றது…  ஏன் உனக்கு தான் கை இருக்குதா ?எனக்கு அடிக்க தெரியாதா ? அப்போ எவ்ளோ காலத்துக்கு பொறுமை சேக்கிறது.  நாங்க அப்படி போராடுனா…. எங்களை வழக்கு போட்டு உள்ள தூக்கி போடுவீங்க. அவன் ஒருத்தன் மேலையாது  முதல் குற்ற பதிவு நடந்திருக்கா பாருங்க… 

எஃப் ஐ ஆர் போடப்பட்டு இருக்கா பாருங்க ?  அப்போ இது எப்படி ஒரு நாட்டுக்குள்ள….   ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு சட்ட திட்டம். எங்கள பார்த்தா அருவருப்பா இருக்கு…  தண்ணி தர முடியல… எங்க பாத்தா அடிக்கிறீங்க….. இவ்வளவு பகையை வச்சுக்கிட்டு, ஏன் மாநிலம் எல்லாம் சேர்ந்து ஒண்ணா நிக்கணும்.

தனித்தனியா பிரிச்சு விட்ரு… கன்னடன் தனியா போட்டும்…  நாங்க தமிழகம்  தனியா போட்டும்… எதுக்கு இருக்கணும்? அது இறையாண்மை.. ஒருமைப்பாடும்….தேச ஒற்றுமை….  எல்லாம் தமிழனுக்கு மட்டும் தானா? மத்த  இனத்துக்கு கிடையாதா ? கேவலமா இருக்குது. இதுல துணிவு தான். என்ன மாதிரி எளிய பிள்ளைகள்…. எங்களை போல  பிள்ளைகள்…  எல்லாம் மக்களால் நேசிக்கிறது காரணம் துணிந்து,  தனித்து நிக்கிறாங்க. துணிவு தான் என தெரிவித்தார்.