இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில்   இசை வெளியீட்டு விழா  ரத்து செய்யப்பட்டது. இதனால், செம கடுப்பான விஜய் ரசிகர்கள், இதற்கு திமுக அரசு தான் காரணம் எனக் கூறி வருகின்றனர். இதுகுறித்து போஸ்டர் அடித்தும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றார்கள். மேலும், விஜய்யை பார்த்து திமுக பயந்துவிட்டதாகக் கூறி, X ட்விட்டர் தளத்தில் #DMKFearsThalapathyVIJAY என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.