
புதியதாக 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் திமுகவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆன்லைன் மூலம் திமுக உறுப்பினராகும் வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வர் ஸ்டாலின் தனது twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திமுக பக்கத்தின் டுவிட்டை மேற்கோள்காட்டி இதுதான் இணைய வழியில் உறுப்பினராக வழிமுறைகள் என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைய வழியில் உறுப்பினராக இணைவதற்கான வழிகாட்டுதல்#JoinDMKonline https://t.co/UHZbbgskBY
— M.K.Stalin (@mkstalin) April 9, 2023