பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி இரவு கர்நாடக மாநிலம் சென்றார். இன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து தெப்பக்காடுகள் யானைகள் முகாமுக்கு சாலை மார்க்கமாக சென்றார். அங்கு யானைகள் வரிசையாக நின்றது. அந்த யானைகளுக்கு பிரதமர் மோடி கரும்புகளை உணவாக கொடுத்தார்.

அதன் பிறகு அந்த யானை முகாமில் இருக்கும் மூத்த பாகன்களான மாறன், குன்னன், தேவராஜன், திருமாறன் ஆகியரோடு பிரதமர் மோடி உரையாற்றினார். அதைத்தொடர்ந்து தி எலிபன்ட் விஸ்பர்ஸ் சென்ற குறும்படத்திற்காக ஆஸ்கர் விருது வென்ற பொம்மன்-பெள்ளி தம்பதியை பிரதமர் மோடி சந்தித்து உரையாற்றினார். அவர்களுடன் உரையாற்றும் போது அவர்கள் வளர்த்த யானைகளை தொட்டு பார்த்து மகிழ்ந்த பிரதமர் மோடி சுமார் அங்கு ஒரு மணி நேரம் இருந்தார். மேலும் அங்கிருந்து பிரதமர் மோடி கிளம்பிச் சென்ற நிலையில் படுகர் மற்றும் தோடர் இன மக்கள் அவருக்கு அவருக்கு வரவேற்பு கொடுக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.