சிவகங்கையை கூட்டணி கட்சிக்கோ, காங்கிரஸ்கோ ஒதுக்குவதால் தங்களது செல்வாக்கு அங்கே குறைய தொடங்குகிறது என்ற கருத்தை திமுகவினர் முன் வைத்திருக்கிறார்கள்.   சிவகங்கை தொகுதியில் மக்களவை உறுப்பினராக இருப்பவர் கார்த்தி சிதம்பரம். அந்த தொகுதியை திமுகவிற்கு இந்த முறை ஒதுக்க வேண்டும் என்று திமுகவைச் சேர்ந்தவர்கள் மேல்மட்ட குழுவிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

ஏற்கனவே முதற்கட்ட பேச்சுவார்த்தை திமுகவுக்கும்,  காங்கிரஸ்க்கும் நடந்து சு இருக்கிறது.  ஆரம்ப நிலையில் பேச்சு வார்த்தை இருக்கும்போது எதையும் சொல்ல முடியாது. பேச்சுவார்த்தை நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எல் அழகிரி  நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சிவகங்கை தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்க கூடாது என்று திமுகவினர் மேல் இடத்திற்கு தங்களது கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள். சிவகங்கை தொகுதியில் திமுகவினரே போட்டியிட வேண்டும் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.  அதற்கான காரணத்தையும் அவர்கள் சொல்லுகிறார்கள். தொடர்ச்சியாக கூட்டணி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கும்போது திமுகவில் செல்வாக்கு குறைகிறது. எனவே இந்த முறை திமுகவே இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று சொல்கிறார்கள்.