செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, சென்னையில் இருந்து 30 கிலோமீட்டருக்கு  அப்பால் காட்டுப்பகுதி என்று அழைக்க கூடிய இடத்தில் ஒரு ( அதானியினுடைய ) தனியார் துறைமுகம் என்று அறிவிப்பதற்கு உண்டான பணி…  அதாவது ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருந்த சிறிய துறைமுகத்தை 6,111 ஏக்கர் அளவில் விரிவுபடுத்துவதற்கு உண்டான கருத்து கேட்பு  கூட்டத்தை திமுகவின் உடைய சட்டமன்ற உறுப்பினரே முன் முயற்சி எடுத்து நடத்துவதற்கு உண்டான வேலைகளை செய்து வருகிறார்.

2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவுபடுத்தப்பட்டால்…. ஏறக்குறைய 25 லிருந்து 30 மீனவ கிராமங்கள்  அடியோடு அழிக்கப்பட்டு விடும்.  அவருடைய வாழ்வாதாரம் போகும்…  இந்த விரிவாக்கத்திற்கு ஒத்துக்கொள்ள மாட்டோம் என்று திமுக மேடை தோறும் முழங்கியது. அதனுடையதலைவர்கள் எல்லோரும் பேசினார்கள்.

இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு அந்த துறைமுக பணியை விரிவுபடுத்துவதற்கு…  துரிதப்படுத்தற்கு திமுக  முன்னிற்கின்றது. அது நீட் விவகாரமாக இருந்தாலும் சரி, மதுவாக இருந்தாலும் சரி,  அதில் இதுபோன்று…  சேலத்தில் இருந்து சென்னை பசுமை சாலை விரிவாக்கமாக இருந்தாலும் சரி…  தேர்தலுக்கு முன்பாக ஒன்று சொல்வதும்… இப்போது  தேர்தலுக்குப் பிறகு நேர்மாறாக மாற்றி பேசுவதும் திமுகவினுடைய வாடிக்கையாக இருக்கிறது.

காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்கு எந்த காரணத்தைக் கொண்டும் அரசு அனுமதி அளிக்க கூடாது. ஏனென்று சொன்னால் 2000 ஏக்கர் அளவிற்கு கடலுக்குள்ளேயே நிலத்தை உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு அவர்கள் சுற்றுப்புறசூழலை கெடுக்க இருக்கின்றார்கள். இது ஆபத்தானது. எனவே காட்டுப்பள்ளி விரிவாக்கத்திற்கு தமிழ்நாடு அரசு ஒருபோதும் துணை நிற்க கூடாது என்று தெரியப்படுத்த விரும்புகிறேன் என தெரிவித்தார்.