சென்னை அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் 72 பேர் இதில் கலந்து கொண்டுள்ளார்கள். அதேபோல அமைச்சர்கள், தொகுதி பார்வையாளர்கள் என்று ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி ஒட்டுமொத்தமாக  150-க்கும் மேற்பட்ட நபர்கள் இதில் பங்கேற்று இருக்கின்றார்கள்.வீடியோ கான்பரன்ஸ் தமிழக முதல்வரும், திமுக கட்சியின் தலைவருமான முக.ஸ்டாலின் ஆலோசனை வழங்குகின்றார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி பணி செய்வது என்பது தொடர்பாக கருத்துக்களையும்,  ஆலோசனையையும் வழங்க இருக்கிறார்கள். இதற்கு முன்பாகவே மண்டலம்  வாரியாக பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு, மண்டல வாரியாக பொதுக்கூட்டங்கள் வரை நடத்தப்பட்டிருக்கிறது.  பூத்து கமிட்டி நிர்வாகிகள் எந்த அளவுக்கு அமைக்கப்பட்டு இருக்கிறது?  எங்கு தொய்வு ஏற்பட்டிருக்கிறது ? அதனை  சரி செய்யப்பட்டு அந்த பணிகளை மாவட்ட செயலாளர்கள் முழுமையாக செய்ய வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களிடம் எந்த மாதிரியான கருத்துக்கள் வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்தில் என்னென்ன பிரச்சனை இருக்கிறது ? கட்சி ரீதியான முரண்பாடுகள் ஏதும் இருக்கிறதா ? என்பது தொடர்பாகவும் தமிழகத்தினுடைய முதல்வரும் கட்சியினுடைய தலைவருமான முக. ஸ்டாலின் அவர்கள் மாவட்ட செயலாளர்களுடன் கலந்து ஆலோசனை செய்ய இருக்கிறார்கள். கூட்டணி கட்சிகளுக்கு தமிழகத்தில் எந்தெந்த கட்சிக்கு எங்கெங்கு எவ்வளவு பலம் இருக்கிறது ? கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் ஒதுக்கினால் வெற்றி வாய்ப்பு அவர்களுக்கு இருக்கும்.

கட்சியில் உட்கட்சி பூசல்கள் எப்படி இருக்கிறது ? என்ன மாதிரியான நடைமுறைகளை ஒரு ஒரு மாவட்டத்திலும் பின்பற்றப்படுகிறார்கள். கருத்து முரண்பாடுகள் உள்ளதா ? அதையெல்லாம் தவிர்த்து புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான பணிகளை கட்சியினுடைய நிர்வாகிகள்…  முக்கியமாக  மாவட்ட செயலாளர்கள் மும்மரமாக செய்ய வேண்டும். தொகுதி பார்வையாளர்கள் பொறுப்பை எப்படி கையாளுகிறார்கள் ? ஒரு தொகுதியில் திமுகவுக்கு எத்தனை சதவீதங்கள் வாக்குகள் இருக்கிறது ? அந்த தொகுதியை பொருத்தவரை எத்தனை % வாக்குகள் பெறலாம் ?  என்பது போன்ற கருத்துக்களை ஸ்டாலின் கேட்டறிகின்றார்.