இஸ்லாமிய மக்கள், கிறிஸ்துவ மக்கள், சிறுபான்மையின மக்கள் வாக்கு அதிமுகவுக்கு கிடைக்க  என்ன வியூகத்தை வகுக்க போறீங்க என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்த மக்களுக்கு பாதுகாப்பு முக்கியம். அதை அவர்கள் உணர்ந்து இருகாங்க. அண்ணா திமுக ஆட்சியில் நமக்கு எந்த பிரச்சனையும் இல்ல. முதல்ல வாழக்கூடிய ஒரு உரிமை வேணும்.  அடுத்து சலுகை. அந்த  ரெண்டுமே நாங்க தான கொடுத்து இருக்கோம்.

திமுக  உதட்டுல தேனை தடவிட்டு போயிடுவாங்க அவ்ளோதான்.   அதனால ஒரு பிரயோஜனமும் கிடையாது என அவங்களுக்கு தெரியுது. 2021இல் தேர்தல் நடந்தது. தமிழ்நாட்டில் தேனும், பாலும் ஓடும். தமிழ்நாட்டில்  சிறுபான்மை மக்கள் எல்லாம் பெரிய ஏற்றம் பெறுவாங்க. தமிழ்நாட்டில் இஸ்லாமிய மக்கள் எல்லாம் பெரிய அளவுக்கு ஏற்றம் பெறுவாங்க என சொன்னாங்க.

இன்னைக்கு எல்லாமே ஏற்றம் ஆயிருச்சா? அந்த குடும்பம்தான் இன்னைக்கு ஏற்றமாச்சே ஒழிய,  எந்த ஒரு சிறுபான்மையின மக்கள் பொருளாதார ரீதியா ஏற்றம் பெறுவதற்கு திட்டம் எங்க கொண்டு வந்தாங்க ? கல்வி ரீதியா ஏற்றம் பெறுவதற்கு என்ன திட்டம் கொண்டு வந்தாங்க ?   சமூக ரீதியா ஏற்றம் பெறுவதற்கு என்ன திட்டம்  கொண்டு வந்தாங்க ? ஒண்ணுமே இல்ல. அதனால  அவர்கிட்ட இருக்குற கூட்டணி கட்சியை வச்சி இன்னைக்கு ADMKவை விமர்சனம் பண்ணி பேச வைக்குறாரு என தெரிவித்தார்.