திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திராவிட முன்னேற்ற கழகம் என்றைக்குமே மாணவர்களுடன் பயணிக்கின்ற இயக்கம். மாணவர்களுக்காக பயணிக்கின்ற ஒரு இயக்கம் என்பதை நீங்கள் அறிவீர்கள். முத்தமிழறிஞர் கலைஞர்கள் ஆட்சிக்கு வரும் போது தான் தமிழ்நாடு முழுவதும் 3 கிலோமீட்டருக்கு ஒரு தொடக்க பள்ளி என பள்ளிகளை எண்ணிக்கையை பெருக்கினார். பள்ளிகள் மட்டுமல்ல பல கல்லூரிகளை உருவாக்கி கொண்டு வந்ததும் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் தான்,  நம்முடைய ஆட்சியில் தான்.

பொறியியல்,  மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு நுழைவு தேர்வு தேவையில்லை என்று கலைஞர் அவர்கள் தான் உருவாக்கினார்கள். சென்ற வருடம் குஜராத்தில் நம்முடைய ஒன்றிய பிரதமர் மோடி அவர்கள்,  ஒரு மருத்துவ கல்லூரி திறப்பதற்காக சென்றிருக்கிறார்.  அங்கு பேசும்போது பேசுகிறார்,  குஜராத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவ கல்லூரி கொண்டு வரணும்னு, எப்ப சென்ற ஆண்டு குஜராத்தில் பேசியிருக்கிறார்.

ஆனால் இங்கு தமிழ்நாட்டில் இதை 2006- ஆம் ஆண்டு நம்முடைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்பதை 2006 ஆம் ஆண்டு நிறைவேற்றி காட்டியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். அது மட்டுமல்ல பெண்களுக்கு கட்டணம் இல்லா கல்வி. மாணவர்கள் கட்டணமில்லா பயணத்திற்கு  பஸ் பாஸ். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி கடன் ரத்து, கல்வி கடனுக்கு வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கலைஞர் அவர்கள் மாணவர்களின் கல்விக்காக ஆட்சிய பணிகள், சாதனைகள் ஏராளம்.   கலைஞர் வழியில் வந்த நம்முடைய தலைவர் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என தெரிவித்தார்.