பண்டிகைக் காலத்தில், டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களில் மது விற்பனையில் கடந்த ஆண்டை  ஒப்பிடுகையில், 31% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீபாவளி, சாத் மற்றும் கோவர்தன் பூஜையை முன்னிட்டு மது விரும்பிகள்  மொத்தமாக ரூ.100 கோடிக்கு மேல் மதுபானத்திற்காக செலவு செய்துள்ளனர். நவம்பர் 9 ஆம் தேதி வரையிலான கடந்த 15 நாட்களில், தேசிய தலைநகர் முழுவதும் உள்ள ஒயின் ஷாப்களில் 2,58,19,988 மதுபாட்டில்கள் விற்பனையாகியுள்ளன, 

கடந்த ஆண்டில்  இதே காலக்கட்டத்தில் 1,78,21,320 மதுபாட்டில்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 54.92 லட்சம் மதுபாட்டில்கள் விற்பனையாகியுள்ளன, செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 20,78,668 மதுபாட்டில்கள் விற்பனையாகியுள்ளன. இந்த துடிப்பான பண்டிகை காலத்தில்  சராசரி தினசரி விற்பனை 8 முதல் 10 லட்சம் பாட்டில்களில் இருந்து முன்பில்லாத  வகையில் 20 லட்சம் பாட்டில்களாக உயர்ந்துள்ளது.