டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் நடைப்பயிற்சியை பொதுமக்கள் தவிர்க்க டெல்லி மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. காற்று மாசு காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவதால் அரசு பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. மேலும் நுரையீரல் மற்றும் இதய நோயாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.