மதுரை கோட்டத்தில் ரயில்வே பயணிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் தொடர்பான தகவல்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 

  • இந்திய ரயில்வேயின் மதுரை கோட்டத்தில், பயண  டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தல் மற்றும் குறைபாடுள்ள டிக்கெட்டுகளை எடுத்துச் சென்றது உட்பட பல்வேறு விதிமீறல்களுக்காக மொத்தம் 15,734 நபர்கள் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர்.
  • இந்த பயணிகளுக்கு அதிகாரிகள் விதி மீறலுக்காக அபராதம் விதித்துள்ளனர். அவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராத தொகையாக   ரூ. 1.6 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. 
  • மேலும், 308 பயணிகளுக்கு முறையான பதிவு இல்லாமல் ரயில்களில் அதிகப்படியான லக்கேஜ் அல்லது பொருட்களை எடுத்துச் சென்றதற்காக ரூ.1.98 லட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது.
  • வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்கு பொதுவாக ரயில் பயணத்தில் ஏற்றம் காணப்படும், இந்நிலையில் நவம்பர் 5 முதல் 11 வரை இது போன்று விதிமீறலில் ஈடுபடுபவர்களை பிடிக்க சிறப்பு டிக்கெட் சோதனை நடத்த  அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.