ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்தி குறிப்பில் குடியிருப்பதாவது, பிளாஸ்டிக் பொருட்கள் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாமல் மாற்றிய சிறந்த 3 பள்ளிக்கூடங்கள்,3 கல்லூரிகள், 3 வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. முதல் பரிசாக 10 லட்ச ரூபாயும், இரண்டாவது பரிசாக 5 லட்ச ரூபாயும், மூன்றாவது பரிசாக 3 லட்ச ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

இந்த விருது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் erode.nic.in என்ற மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் இருக்கும் விவரங்களை பூர்த்தி செய்த பின் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற மே மாதம் 1- ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் ஆகும் என அதில் கூறப்பட்டுள்ளது.