மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் மழை குறைந்ததால் அணைக்கு 5391 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அணையில் இருந்து 3,269 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இப்போது வைகை அணையில் இருந்து மூன்றாவது முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டத்தில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வேடிக்கை பார்க்கவும் செல்பி எடுக்கவும் வேண்டாம் என போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும் ஆற்றில் குளிப்பவர்கள், துணி துவைப்பவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர்.