கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் கன மழை காரணமாக கன்னியாகுமரியில் 6 வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்தது. மேலும் 30 வீடுகள் சேதமானது. பேச்சி பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மழை நின்ற பிறகும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் அங்கு போக்குவரத்து முடங்கி இருக்கிறது. இதனால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தரவில்லை. நேற்று மூன்றாவது நாளாக சூறைக்காற்று வீசியதால் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.