மதுரை மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு நியோ-மேக்ஸ் என்ற நிதி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனங்கள் கூடுதல் வட்டி தருவதாகவும், அசல் தொகையை குறிப்பிட்ட ஆண்டில் இரட்டிப்பு தொகையாக வழங்குவதாகவும் விளம்பரம் செய்தனர். இதனை நம்பி ஏராளமானோர் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இந்நிலையில் சுமார் 5 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து நிதி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் ஏமாற்றி விட்டனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நிறுவனத்தின் இயக்குனர்கள் சைமன் ராஜா, கபில், தூத்துக்குடியை சேர்ந்த இசக்கி முத்து, சகாயராஜ் ஆகியோரை கைது செய்தனர். நேற்று முன்தினம் நிறுவனத்தின் இயக்குனர்களின் ஒருவரான பத்மநாபன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.